மேலும் செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் இன்று ஜமாபந்தி துவக்கம்
20-May-2025
வால்பாறை, ;வால்பாறையில், ஜமாபந்தி அலுவலர் வருகைக்காக மக்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.வால்பாறை தாலுகா அலுவலகத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, காலை, 9:45 மணி முதலே மக்கள் மனு கொடுக்க காத்திருந்தனர்.ஆனால், ஜமாபந்தி அலுவலர் மகேஸ்வரி (மாவட்ட தாட்கோ மேலாளர்) காலை, 11:45 மணிக்கு தான், தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். இதனால், மனு கொடுக்க வந்த மக்களும், அரசு துறை அதிகாரிகளும் இரண்டு மணி நேரம் காத்திருந்தனர்.அதன்பின், மக்களிடம் மனுக்களை பெற்று பதிவு செய்தனர். நிகழ்ச்சியில், தாசில்தார் மோகன்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதிகாரிகள் 'அப்செட்'
வால்பாறையில் கடந்த வாரம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிலும், அதற்கு முன் நடந்த முகாமில் கொடுத்த மனுக்களுக்கும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், நேற்று நடந்த ஜமாபந்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கினர்.எதிர்பார்த்த அளவு கூட்டம் வராததால், ஜமாபந்தி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் 'அப்செட்' ஆகினர்.
20-May-2025