உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2 மாசமா ஊக்கத்தொகை வரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

2 மாசமா ஊக்கத்தொகை வரலை; பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு

அன்னுார்,;பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊக்கத்தொகை கடந்த இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. இதனால், அவர்கள் அதிருப்தியடைந்ததுள்ளனர்.அன்னுார் வட்டாரத்தில், 60க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள், கால்நடை வளர்ப்போரிடமிருந்து, பால் கொள்முதல் செய்து ஆவினுக்கு வழங்கி வருகின்றன.தமிழகத்தில், ஆவினுக்கு தினமும் சராசரியாக 35 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படுகிறது. தீவன விலை கடுமையாக உயர்ந்து விட்டது. பால் சுரப்பதும் குறைந்து விட்டது. நோய் பாதிப்பு அதிகம் என்பதால், கறவை மாடு வளர்ப்போர் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதையடுத்து, கடந்த டிசம்பரில், தமிழக அரசு, ஒரு லிட்டர் பாலுக்கு, ஒரு ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. இதையடுத்து ஜனவரியில் வழங்கப்பட்ட பாலுக்கு பிப்ரவரியிலும், பிப்ரவரியில் வழங்கப்பட்ட பாலுக்கு மார்ச்சிலும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதன் பிறகு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட பாலுக்கு ஊக்கத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை.இதுகுறித்து பால் உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'அரசு அறிவித்து இரண்டே மாதங்கள் மட்டுமே ஊக்கத்தொகை வழங்கியது. அதன் பிறகு இரண்டு மாதங்களாக வழங்கவில்லை. விரைவில் வழங்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ