மேலும் செய்திகள்
ஊட்டிக்கு கூடுதலாக 20 சிறப்பு பஸ்கள் இயக்கம்
29-May-2025
பொள்ளாச்சி : வரும், ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கோடை விடுமுறையில் வெளியூர் சென்றவர்கள், பொள்ளாச்சி திரும்ப வசதியாக, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோடை விடுமுறை முடிந்து, ஜூன், 2ல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. வெளியூர், சொந்த மாவட்டம் சென்ற பலர் பொள்ளாச்சி, வால்பாறை திரும்ப ஏதுவாக, பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழநி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, இரு தினங்களுக்கு, 20 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:வழக்கமாக, வார இறுதி நாட்களில், பயணியர் கூட்ட நெரிசல் கருதி, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை முடிந்து, பலரும் பொள்ளாச்சி திரும்புவர். அதிலும், வாரத்தின் முதல் நாள், பள்ளி திறக்கப்பட உள்ளதால், பயணியர் கூட்டம் அதிகரித்து, நெரிசல் ஏற்படும்.அதற்கேற்ப சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப, ஜூன், 2ம் தேதி காலை வரை பஸ்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, வால்பாறை, கோவை என, எந்த வழித்தடத்தில் கூடுதல் நெரிசல் என்பதை உடனுக்குடன் கவனித்து, பஸ் இயக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கூறினர்.
29-May-2025