உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்டம் முழுவதும் சோதனை 2000 போதை மாத்திரைகள் பறிமுதல்

மாவட்டம் முழுவதும் சோதனை 2000 போதை மாத்திரைகள் பறிமுதல்

கோவை: மாவட்டத்தில் கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க கல்லுாரி மாணவர்கள், வெளிமாநிலம், மாவட்டத்தில் இருந்து வந்து தங்கியுள்ளவர்கள் விடுதிகளில் போலீசார் சோதனை நடத்தி, போதைப் பொருட்களை பறிமுதல் செய்கின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (நவ.,29) காலை முதல், ஆறு டி.எஸ்.பி.,க்கள், தலைமையில் 500 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முந்தைய கஞ்சா வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குறித்தும், போலீசாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. சிறுமுகை காவல் நிலைய எல்லையில் ஒரு வழக்கில் 2000 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா குறித்து 8 பேர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5.200 கிலோ கஞ்சா மற்றும் 260 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல் செய்யப்பட்டன. மதுக்கரை, கிணத்துக்கடவு, வால்பாறை, சிறுமுகை, சூலூர், செட்டிபாளையம் மற்றும் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன்களில் இவ்வழக்குகள் பதியப்பட்டன. ஏழு பேர் மீது 5 வழக்குகள் பதியப்பட்டு, 7 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பொது இடங்களில் மது அருந்தியது குறித்து 37 வழக்குகள் பதியப்பட்டன. நெகமம், தடாகம், செட்டிபாளையம் மற்றும் சுல்தான்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் 4 பேர் மீது 4 வழக்குகள் பதியப்பட்டன; 39 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை