மேலும் செய்திகள்
நல்வாழ்வு மையங்களுக்கு டாக்டர்கள் ரெடி!
23-Apr-2025
கோவை, ; 208 நகர்ப்புற நல்வாழ்வு மையங்கள் திறப்பு விழாவுக்கு தயார்நிலையில் உள்ள சூழலில், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில், தாமதம் ஏற்பட்டு வருகிறது.பணிக்கு செல்பவர்களும் பயன்படுத்தும் வகையில், 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், தேசிய நகர்ப்புற சுகாதாரக் குழுமத்தின் கீழ், அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. இம்மையங்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் வசதிக்காக, காலை, 8:00 முதல் 12:00 மணி வரையும், மாலை, 4:00 முதல் 8:00 மணி வரையும், செயல்பட்டு வருகிறது.முதல்கட்டமாக, 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தமிழகத்தில், 2023 ஜூன் மாதம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 208 மையங்கள் கட்டி தயாராக உள்ளன.ஒவ்வொன்றும் 25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. உபகரணங்கள், அம்மையங்களில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் அனைவரும் தேர்வு செய்து, பட்டியல் மாவட்ட அளவில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கான நேர்காணல் முடிவுகளை, மையங்கள் திறப்பு தேதி தெரிந்தால் மட்டுமே வெளியிட முடியும் என்பதால், நேற்று மாலை வரை வெளியிடவில்லை. தமிழக முதல்வரின் தேதிக்காக காத்திருப்பதாக, சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறுகின்றனர்.அவர்கள் மேலும் கூறுகையில், 'மே முதல் வாரம் திறக்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், மாவட்ட அலுவலகங்களுக்கு, இப்போது வரை, எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. இம்மையங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட அனைவரும் காத்திருக்கின்றனர்' என்றனர்.
23-Apr-2025