உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் துவக்கம்

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் துவக்கம்

சென்னை:மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், தமிழகம் முழுதும் 52 கோடி ரூபாய் மதிப்பில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை அடையாறு, சாஸ்திரி நகரில் நடந்த திறப்பு விழாவில், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நகர்ப்புற நலவாழ்வு மையத்திற்கான கல்வெட்டை, முதல்வர் திறந்து வைத்து, நலவாழ்வு மையத்தில் உள்ள நவீன வசதிகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பார்வையிட்டார்.நகர்ப்புற நலவாழ்வு மையங்களில், 'அனைவருக்கும் நலவாழ்வு' என்ற திட்டத்தின் கீழ், மகப்பேறு நல சேவைகள், குழந்தை நல சிகிச்சை உள்ளிட்ட 12 அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படும். மேலும், 'இ - சஞ்சீவினி' இணையதள முகப்பின் வாயிலாக, நோயாளிகளுக்கு காணொளி காட்சி வாயிலாக, முதுநிலை மருத்துவர் ஆலோசனை வழங்கும் வகையிலும், இம்மையங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில், அமைச்சர்சுப்பிரமணியன், மேயர் பிரியா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை