உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தீபாவளிக்கு 2.13 லட்சம் பேர் பயணம்; அரசு பஸ்களில் சென்று திரும்பியவர்கள்

தீபாவளிக்கு 2.13 லட்சம் பேர் பயணம்; அரசு பஸ்களில் சென்று திரும்பியவர்கள்

கோவை; கோவை மாவட்டத்தில் இருந்து இயக்கப்பட்ட அரசு சிறப்பு பஸ்கள் வாயிலாக, 2.13 லட்சம் பயணிகள், தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பியுள்ளனர்.ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்வோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்தாண்டும் தீபாவளிக்கு அதிகம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று வந்தனர்.தீபாவளி பண்டிகை கொண்டாட, சொந்த ஊர்களுக்குச் சென்று, திரும்புவோரின் வசதிக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், கோவை மாவட்டத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. காந்திபுரம், சிங்காநல்லுார், சூலுார், உக்கடம், சாயிபாபா காலனி மற்றும் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்டுகளில் இருந்து, மொத்தம், 2,495 பஸ்கள் இயக்கப்பட்டன.அக்., 28 முதல், நவ., 4 வரை எட்டு நாட்கள் சிறப்பு பஸ்கள் இயங்கின. இவற்றின் மூலம் கோவை மாவட்டத்தில் இருந்து, 2.13 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்று, திரும்பினர். இது அரசு பஸ்களில் மட்டும் பயணித்தவர்கள் எண்ணிக்கை மட்டுமே. ஆம்னி பஸ்களில் சென்னை மற்றும் வெளியூர்களுக்கு சென்றவர்கள் மற்றும் ரயில்கள், விமானங்கள் வாயிலாக சென்றவர்கள் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ