மேலும் செய்திகள்
இரண்டே நாளில் 98 டன் கழிவுகள் சேகரிப்பு
05-Aug-2025
கோவை; தமிழகத்தில், 38 மாவட்டங்களில், 52 வனக்கோட்டங்களில் துாய்மைப் பிரசார இயக்கம் நடந்தது. வனப்பகுதிகள், அதனையொட்டியுள்ள நீர்நிலைகளில், பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன. தன்னார்வலர்கள், வனத்துறையினர் என பல்வேறு தரப்பினர், 113 இடங்களில் குப்பையை சேகரித்தனர்.இதில், 25 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட 31 டன் குப்பை சேகரிக்கப்பட்டது. கோவை வனக் கோட்டத்தில், 2.2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''துாய்மை பிரசார இயக்கத்தில், 300 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். வனத்துறையில் இருந்து 85 பேர் பங்கேற்றனர். இதில், பிளாஸ்டிக் கழிவு மற்றும் பாட்டில்கள், 2,259 கிலோ அகற்றப்பட்டன,'' என்றார்.
05-Aug-2025