உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 23 சவரன் நகைகள் திருட்டு

23 சவரன் நகைகள் திருட்டு

பாலக்காடு: பாலக்காடு அருகே, வீட்டின் கதவை உடைத்து, 23 சவரன் தங்க நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி முடப்பல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சிபி. இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு, மனைவியின் உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். இரவு 9:00 மணிக்கு திரும்பி வந்த போது, வீட்டின் கதவு உடைந்த நிலையில் இருந்தது. வீட்டில், படு க்கை அறை அலமாரியில் வைத்திருந்த, 23 சவரன் தங்க நகைகள் திருட்டுப் போனது தெரியவந்தது. இது குறித்து, சிபி அளித்த புகாரின் பேரில் வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை