அரசு முகாமில் 24 பேர் ரத்ததானம்
அன்னுார்; அன்னுார் அரசு மருத்துவமனையில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது, முகாமை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.இதில் ரத்த வங்கி அலுவலர் டாக்டர் விஜய் பேசுகையில், 'ரத்த தானம் பிற உயிர்களை காக்க உதவும். ஒருவர் செய்யும் ரத்த தானம் நான்கு பேருக்கு உதவும். 18 வயதுக்கு மேற்பட்ட ஆரோக்கியமான இருபாலரும் ரத்த தானம் செய்யலாம் ரத்த தானம் செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். ரத்தம் தானமாக வழங்குவதால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,' என்றார்.டாக்டர் சூர்யா, தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் சங்கர், அன்னுார் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தெற்கு ஒன்றிய செயலாளர் விஜய் உள்பட பலர் பங்கேற்றனர்.