உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 2.5 கி.கிராம் புகையிலை பொருட்கள் ரூ.10 லட்சம் பறிமுதல்; மூவர் கைது

2.5 கி.கிராம் புகையிலை பொருட்கள் ரூ.10 லட்சம் பறிமுதல்; மூவர் கைது

போத்தனூர், ;கோவை, குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., அழகுமாரி செல்வம் போலீசாருடன் நேற்று முன்தினம் சுண்டக்காமுத்தூர் சாலையில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடைகளில் விற்கப்படுகிறதா என சோதனை நடத்தினர். மாரியம்மன் கோவில் அருகேயுள்ள கண்ணன் மளிகை கடையில், 1.5 கி.கிராம் புகையிலை பொருட்கள் சிக்கியது, இவற்றை பறிமுதல் செய்த போலீசார், ரூ.10 லட்சம் ரொக்கம், மொபட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதுபோல் எஸ். ஐ. வீரபாவானந்தம் சோதனையில், பி.கே.புதூர், வினாயகர் கோவில் வீதியிலுள்ள சீனிவாசன், 43 என்பவரிடமிருந்து ஒரு கிலோ புகையிலை பொருட்கள், ஸ்கூட்டர் ஆகியவை சிக்கியது. இது தொடர்பாக சுண்டக்காமுத்தூர், கிருஷ்ணா நகரை சேர்ந்த கண்ணன், 60, கார்த்திபன், 31, மற்றும் பி.கே.புதூரை சேர்ந்த சீனிவாசன், 43 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !