299 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
போத்தனூர்; கோவை, குனியமுத்தூர் போலீஸ் எஸ்.ஐ., மருதாம்பாள். இரு நாட்களுக்கு முன் புட்டுவிக்கி சாலை, செங்குளம் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். சந்தேகத்திற்கிடமான வகையில் மூட்டைகளுடன் காணப்பட்டவரிடம் விசாரித்தார்.ராஜஸ்தானை சேர்ந்த மதன்சிங், 36 என்பதும் தடை செய்யப்பட்ட விமல், கூல் லிப், கணேஷ், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள். 299 கிலோ இருப்பதும் தெரிந்தது. அவற்றுடன், ரூ.4.5 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த போலீசார், மதன்சிங்கை கைது செய்தனர்.