உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாய்பேச முடியாத சிறுமி பலாத்காரம்; 3 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர்

வாய்பேச முடியாத சிறுமி பலாத்காரம்; 3 சிறுவர்கள் போலீசாரிடம் சிக்கினர்

கோவை; தொண்டாமுத்துார் பகுதியில் வாய்பேச முடியாத சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்த மூன்று சிறுவர்களை பிடித்து, போலீசார் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண், தொண்டாமுத்துார் பகுதியில் தங்கியிருந்து கட்டட வேலைக்கு சென்று வருகிறார். கணவர் பிரிந்து சென்ற நிலையில், தனது 16 வயது வாய் பேச முடியாத மகளுடன் வசித்து வருகிறார்.கடந்த 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு, சிறுமி அருகில் உள்ள கடைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சிறுமியை அழைத்து வந்து வீட்டில் விட்டார்.சிறுமியின் தாய் விசாரித்த போது, சிறுமி தன்னை ஒருவர் அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சைகையில் தெரிவித்தார். இது தொடர்பாக, சிறுமியின் சகோதரர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், சிறுமியை ஒருவர் பைக்கில் கடத்திச் சென்றதும், அவர் இறக்கி விட்டு சென்ற பிறகு, வேறு இருவர் பைக்கில் கடத்திச்சென்றதும் தெரியவந்தது.பேரூர் டி.எஸ்.பி., தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், சிறுமியை பைக்கில் துாக்கிச் சென்றது, நரசீபுரம் மற்றும் பூலுவபட்டியை சேர்ந்த 17 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது.போலீசார், நரசீபுரத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை, நேற்று முன்தினம் பிடித்தனர். பூலுவபட்டியை சேர்ந்த இரு சிறுவர்கள், திருவனந்தபுரத்துக்கு தப்பினர். தனிப்படை போலீசார் அங்கு சென்று, இரண்டு சிறுவர்களை பிடித்து, கோவை அழைத்து வந்தனர். மூன்று சிறுவர்களையும் போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ