உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 3,000 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

3,000 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

மேட்டுப்பாளையம்; காரமடை அருகே தோலம்பாளையம் கிராமத்தில் 3,000 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி திங்கட்கிழமை முதல் துவங்கியது. பசு மற்றும் எருமைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. தொடர்ந்து 21 நாட்கள் இந்த தடுப்பூசி போடும் பணியானது நடைபெற உள்ளது. இதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் தடுப்பூசி போடும் பணி துவங்கியது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கிராமங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. காரமடை அருகே தோலம்பாளையத்தில் மட்டும் 3,000 மாடுகள் உள்ளன. இதுகுறித்து தோலம்பாளையம் கால்நடை மருந்தகம், உதவி மருத்துவர் மோகன் குமார் கூறுகையில், இந்த தடுப்பூசி போடவிட்டால் கோமாரி நோய் மாடுகளை தாக்க வாய்ப்புள்ளது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத் திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம், என்றார்.----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ