போத்தனுார், மதுக்கரையில் 303 விநாயகர் சிலை பிரதிஷ்டை
போத்தனுார்; கோவையில் ஹிந்து முன்னணி, ஹிந்து மக்கள் கட்சி (தமிழகம்), ஏ.பி.வி.பி., விவேகானந்தர் பேரவை உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், பலவித உருவத்தில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. போத்தனுார், சுந்தராபுரம், குனியமுத்துார், செட்டிபாளையம், மதுக்கரை, க.க.சாவடி போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 303 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. ஒவ்வொரு சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர். நேற்று குறிச்சி குளத்தில் சிவசேனா அமைப்பினரின் சிலை உட்பட 5 சிலைகள், கோவில் கிணறுகளில் 3 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. நாளை, மீதமுள்ள சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட உள்ளன.