உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு; 31 ஆயிரத்து 415 பேர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு அறிவியல் தேர்வு; 31 ஆயிரத்து 415 பேர் பங்கேற்பு

கோவை; பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தை, 31 ஆயிரத்து, 415 பேர் நேற்று எழுதினர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச், 28 முதல் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களை அடுத்து நேற்று அறிவியல் பாட தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில் தமிழ் வழிக்கல்வியில் பயின்ற, 9,377 பேர், ஆங்கில வழிக்கல்வியில் பயின்ற, 22 ஆயிரத்து, 610 பேர் என, 31 ஆயிரத்து, 987 பேர் எழுத இருந்தனர். இவர்களில் தமிழ் வழியில், 8,941 பேர், ஆங்கில வழியில், 22 ஆயிரத்து, 474 பேர் என, 31 ஆயிரத்து, 415 பேர் எழுதினர்; 572 பேர் எழுதவில்லை. அறிவியல் பாட தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை