உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்

சுல்தான்பேட்டையில் 3,300 வாழை மரங்கள் சேதம்

சூலுார்; சுல்தான்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால், 3 ஆயிரத்து, 300 வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.சுல்தான்பேட்டை வட்டாரத்தில், பூராண்டாம்பாளையம், வதம்பச்சேரி உள்ளிட்ட கிராமங்களில், பல நூறுஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளன. சில வாரங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள், நேற்று முன்தினம் இரவு, சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் முறிந்து விழுந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த, சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் ரமேஷ் மற்றும் உதவி அலுவலர்கள் தியாகராஜன், சாய் கண்ணன் ஆகியோர், வதம்பச்சேரி, பூராண்டாம்பாளையம் கிராமத்தில் பாதிப்புக்கு உள்ளான வாழை மரங்களை ஆய்வு செய்தனர். அதில், அறுவடைக்கு தயாராக இருந்த, 3 ஆயிரத்து, 300 வாழைமரங்கள் முறிந்தது தெரிந்தது. ஆய்வு அறிக்கை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி