36 சிறப்பு பஸ்கள் இயக்கம்
மேட்டுப்பாளையம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டிலிருந்து, தமிழகத்தின் பல பகுதிகளுக்கு நேற்று 36 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் கூட்டத்தை பொறுத்து தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என, அரசு போக்குவரத்து கழகம் மேட்டுப்பாளையம் கிளை மேலாளர் பாஸ்கர் தெரிவித்தார்.