தேங்காய் திருட்டு; 4 பேர் கைது
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தேங்காய் திருட்டு வழக்கில் நான்கு பேரை வடக்கிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சி அருகே, சேர்வக்காரன்பாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவர், கோ - ஆப்ரேட்டிவ் வங்கியில் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது விவசாயம் செய்கிறார். இவரது தோப்பில் விற்பனைக்காக, தேங்காய் பறித்து விற்பனைக்காக குவித்து வைத்திருந்தார்.இந்நிலையில், ராமபட்டிணத்தை சேர்ந்த மதன்,20, சக்திவேல்,35, மற்றும், 17, 16 வயதான இருவர் என, மொத்தம், நான்கு பேர், இருசக்கர வாகனங்களில், தேங்காய்களை திருடி சென்று, ராமபட்டிணம் ரோட்டோரம் கொட்டி வைத்துள்ளனர்.ராமபட்டிணத்தில் உள்ள சரக்கு வாகனத்தை வாடகைக்கு எடுத்து, அந்த தேங்காயை ஏற்றினர். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் சந்தேகமடைந்து அவர்களை பிடித்து, தோட்டத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின், அவர்களை கைது செய்து, வடக்கிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.