உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போதை பொருள் கடத்தல்:  4 பேர்  சரணடைய உத்தரவு

 போதை பொருள் கடத்தல்:  4 பேர்  சரணடைய உத்தரவு

கோவை: போதை பொருள் கடத்திய வழக்கில், நான்கு பேர் கோர்ட்டில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவையில், ஓப்பியம் என்ற போதை பொருள் கடத்திய வழக்கில், மன்சூர்,46, நோயல்,58, ரபீக்,47, ஆகியோர் 2004 ஜன., 24ல் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, கோவை இ.சி., கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. ஜாமினில் சென்றவர்களில் மதுரை, திருமங்கலம், அகதிகள் முகாமை சேர்ந்த நோயல், ஆழியாரை சேர்ந்த ரபீக் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த சிவாரெட்டி,51, என்பவர் 10 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் 2006 டிச., 26ல் கைது செய்யப்பட்டார். ஜாமினில் சென்றவர் கோர்ட்டில் ஆஜராகாததால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. 2012 நவ.,15ல், ஒரு கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்ட பீகார், நாலந்தா மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார்,47, தலைமறைவானார். அவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இவர்கள் நான்கு பேரும் வரும் 30க்குள், கோவை இ.சி. கோர்ட்டில் சரண் அடைய உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை