உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வருவாய்த்துறை அதிகாரியிடம் 4.17 லட்சம் ரூபாய் மோசடி

வருவாய்த்துறை அதிகாரியிடம் 4.17 லட்சம் ரூபாய் மோசடி

கோவை : வருவாய்த்துறை அதிகாரியிடம் ரூ.4.17 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை கொண்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி, 60, வருவாய்த்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு, சில மாதங்களுக்கு முன், கோவை நஞ்சுண்டாபுரம் ரோட்டில், தனியார் காஸ் ஏஜென்சி நடத்தி வரும் சக்திவேல், 55 மற்றும் அவரது மனைவி மலர்விழி, 48 ஆகியோர் அறிமுகமானார்கள்.அவர்கள் ஆறுச்சாமியிடம், தங்களது காஸ் ஏஜென்சியில் முதலீடு செய்தால், பங்கு தாரராக சேர்த்து அதிக லாபம் தருவதாக தெரிவித்துள்ளனர்.ஆறுச்சாமி பல்வேறு தவணைகளாக அவர்களது வங்கி கணக்கில், ரூ.4.17 லட்சத்தை அனுப்பி வைத்தார். அதன் பின் கணவன் - மனைவி கூறியபடி அவரை பங்குதாரராகவும் சேர்க்கவில்லை; எந்த லாப பணத்தையும் தரவில்லை.ஆறுச்சாமி அவர்களிடம் கேட்டபோது, விரைவில் லாப பணத்தை தந்து விடுவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் வெகு நாட்களாகியும் எந்த பணத்தையும் தரவில்லை. இதனால் ஆறுச்சாமி, தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டார்.ஆனால் அந்த பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்தனர். ஆறுசாமி, ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், தம்பதி சக்திவேல், மலர்விழி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி