பில்லுார் அணையில் 49 மி.மீ., மழை
கோவை : கோவை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் சில நாட்களுக்கு மழைப்பொழிவு காணப்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. நகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை, 5:30 மணியில் இருந்து இரவு, 7:30 மணி வரை பரவலாக மழை காணப்பட்டது.நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, சிறுவாணி அடிவாரத்தில், 3 மி.மீ., அணை பகுதியில், 25 மி.மீ., மழை பதிவானது. 41.85 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. 9.84 கோடி லிட்டர் தண்ணீர், குடிநீர் பயன்பாட்டுக்காக அணையில் இருந்து எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.பில்லுார் அணையில், 49 மி.மீ., மழை பதிவானது. மொத்தம், 100 அடி உயரமுள்ள இந்த அணையில், 88 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. வினாடிக்கு 1,851 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மின்னுற்பத்திக்காக, வினாடிக்கு, 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பீளமேடு - 6.50 மி.மீ., வேளாண் பல்கலை - 9.60, பெரிய நாயக்கன் பாளையம் - 12.20, கோவை தெற்கு - 17.10, சூலுார் - 59.10, வாரப்பட்டி - 42, தொண்டாமுத்துார் - 26, போத்தனுார் - 8, மாக்கினாம்பட்டி - 120, கிணத்துக்கடவு - 13, ஆனைமலை - 46, சின்கோனா - 40, சின்னக்கல்லார் - 38, சோலையாறு - 57 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.