மேலும் செய்திகள்
பழநி பாதயாத்திரைக்குழு ஆலோசனை கூட்டம்
27-Jan-2025
வால்பாறை; வால்பாறையில், பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில், முருகபக்தர்கள் காவடிக்குழுவின் பழநி பாதயாத்திரை, 49ம் ஆண்டு திருவிழாவையொட்டி, நேற்று முன்தினம் முருகபக்தர்கள் நடுமலை ஆற்றிலிருந்து சக்தி கும்பம் மற்றும் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து அன்னதான விழா நடந்தது.நேற்று காலை, 5:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. காலை, 5:30 மணிக்கு பழநி ஆண்டவர் கோவிலுக்கு முருகபக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரையாக சென்றனர். விழா ஏற்பாடுகளை பழநி பாதயாத்திரைக்குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.
27-Jan-2025