உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை மாவட்டத்துக்கு 5 அப்சர்வர்கள்

 கோவை மாவட்டத்துக்கு 5 அப்சர்வர்கள்

கோவை: கோவை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. 2 சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் 'அப்சர்வர்'களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 90 பறக்கும் படைகள், 90 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை கண்காணிக்கவும், அறிவுறுத்தல் வழங்கவும் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. நடத்தை விதிமுறை மீறப்பட்டாலோ, பரிசு பொருட்கள் வழங்கினாலோ 0422 - 2300 156 - 159, 1800-425-0086 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 1950 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். C----Vigil மொபைல் செயலி மூலமாக புகைப்பட ஆதாரத்துடன் புகார் பதிவிடலாம். கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பறக்கும் படைக்கு தகவல் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நேற்று கட்டுப்பாடு மையத்துக்கு 17 புகார்களும், சி-விஜில் செயலிக்கு 50 புகார்களும் வந்தன. 48 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2 புகார் குறித்து பறக்கும் படையினர் விசாரிக்கின்றனர்.

தேர்தல் அப்சர்வர்கள் யார், யார்?

2 சட்டசபை தொகுதிக்கு ஒருவர் வீதம் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் 'அப்சர்வர்'களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையத்துக்கு சுனில்குமார் யாதவ், சூலுார், சிங்காநல்லுாருக்கு கிருஷ்ணா ஆதித்யா, கோவை வடக்கு, தெற்குக்கு சஞ்சய் குமார், தொண்டாமுத்துார், கிணத்துக்கடவுக்கு பிரஞ்சல் யாதவும், பொள்ளாச்சி, வால்பாறைக்கு யஷீந்திரா சிங் ஆகிய அப்சர்வர்கள், இன்று முதல் மே 4ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் தங்கியிருந்து, தேர்தல் பணிகளை கண்காணிக்க ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை