உள்ளூர் செய்திகள்

5 பதவி: 126 பேர் போட்டி

கோவை; தமிழக அரசின் சமூக நலன் மற்றும்மகளிர் உரிமை துறையின் கீழ் செயல்படும் மகளிர் அதிகார மையத்தில் பணிபுரிய ஒப்பந்த பணியாளருக்கான நேர்காணல், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பாலின நிபுணர், நிதிய கல்வியறிவு வல்லுனர், தகவல் தொழில்நுட்ப பணியாளர் (மிஷன் சக்தி திட்டம்) பல்நோக்கு உதவியாளர் ஆகிய பணியிடங்களுக்கு தலா ஒருவர் வீதம், 5 பணியிடத்துக்கு நேர்காணல் நடத்தப்பட்டது; 126 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'தற்காலிக பணி என்ற போதிலும், முதுகலை பட்டதாரிகள் அதிகம் விண்ணப்பித்திருப்பது ஆச்சரியம் அளிக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !