உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  51 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

 51 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

கோவை: கோவை புறநகர் மாவட்டத்தில், 51 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. கோவை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கடந்த மாதத்தில் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதை பொருட்கள் விற்பனை போன்ற குற்ற செயல்களில் தொடர்புடைய எதிரிகளை திறம்பட செயல்பட்டு கைது செய்த போலீசாருக்கும், நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர சிறப்பாக பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் போலீசார் உள்பட மொத்தம், 51 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள்பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ