உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 542 மனுக்கள்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் 542 மனுக்கள்

வால்பாறை; உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து, 542 மனுக்கள் பெறப்பட்டன.வால்பாறையில், தமிழக அரசின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் இரண்டு நாட்கள் நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்த முகாமில், அங்கன்வாடி, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதி, சோலையாறுஅணை, காலை உணவு திட்டம், ரேஷன் கடை உள்ளிட்டவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.நேற்று முன் தினம் மாலையில், நகராட்சி சமுதாயக்கூடத்தில் கலெக்டர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். அவருடன் நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி, நகராட்சி கமிஷனர்(பொ) கணேசன், பொள்ளாச்சி ஆர்.டி.ஓ., பொறுப்பு விஸ்வநாதன், சமூக பாதுகாப்பு திட்ட பொறுப்பு அதிகாரி சங்கீதா உட்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் நடந்த முகாமில், பொதுமக்களிடம் இருந்து மொத்தம், 542 மனுக்கள் பெறப்பட்டன. இதில், இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் உதவித்தொகை, குடிநீர் வசதி கோரியும், தடுப்புச்சுவர் அமைக்க கோரியும், மனு அளித்தனர்.பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் கம்யூட்டர் வாயிலாக பதிவு செய்து, உடனடியாக ரசீதும் வழங்கப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி