உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

6 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சியில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஆறு கிலோவை கிழக்கு போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்தனர். பொள்ளாச்சி இமான்கான் வீதி அருகே கிழக்கு போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது, சீனிவாசபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ்,44, என்பவர் விற்பனைக்காக ஆறு கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ