உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 63,250 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

63,250 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டத்தில் தற்போது வரை 63,250 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த 15ம் தேதி துவங்கியது. இத்திட்டத்தில் அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. கோவை மாவட்டத்தில், 2.34 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 15ம் தேதி துவங்கிய நிலையில், தொடர்ந்து, 21 நாட்கள் நடக்கிறது. தடுப்பூசி பணிக்காக, 114 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தவறாது தங்களின் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். கோமாரி நோய் காரணமாக மாடுகளின் இறப்புகள் குறைவாக இருந்தாலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினை பிடிப்பு தடைபடுவது, இளம் கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களின் பசுக்கள் எருதுகள் மற்றும், 4 மாதத்திற்கு மேற்பட்ட இளம் கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து, கால்நடை பராமரிப்புத் துறை கோவை மண்டல உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தற்போது வரை 63,250 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணி தொய்வு இன்றி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது,என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை