உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளிகளில் 65 ஆசிரியர்கள் ஓய்வு

அரசு பள்ளிகளில் 65 ஆசிரியர்கள் ஓய்வு

கோவை: கோவையில் 2024-2025 கல்வியாண்டில், அரசு பள்ளிகளில் பணியாற்றிய, 65 பட்டதாரி ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ளனர். மாவட்டத்தில் தற்போது 1,210 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 1.50 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். 2024 ஜூன் மாதம் முதல் 2025 மே மாதம் வரை, மொத்தம் 65 பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் - 9, ஆங்கிலம் - 11, கணிதம் - 15, அறிவியல் - 13, சமூக அறிவியல் - 7, சிறப்பு ஆசிரியர் - 3, இடைநிலை ஆசிரியர் - 2 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இந்த காலி பணியிடங்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டிருப்பதற்கான வாய்ப்பு அதிகம் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை