மேலும் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு; 3075 பேர் பங்கேற்பு
29-Sep-2025
கோவை; தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 'குரூப் 2, குரூப் 2ஏ' தேர்வுகள் நேற்று நடந்தன. 1,905 தேர்வு மையங்களில் நடந்த தேர்வில், 5.53 லட்சம் பேர் பங்கேற்றனர். 3.41 லட்சம் பேர் பெண்கள். ஒரு பணியிடத்திற்கு, 858 பேர் போட்டியிடுகின்றனர். கோவை மாவட்டத்தில் ஐந்து மையங்களில், தேர்வுகள் நடந்தன. 23 ஆயிரத்து, 650 பேர் தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இவர்களில் நேற்று 16 ஆயிரத்து, 471 பேர் தேர்வு எழுதினர்(69 சதவீதம்); 7,179 பேர் தேர்வு எழுத வரவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தேர்வின் அனைத்து நடவடிக்கைகளும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.
29-Sep-2025