உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 750 போலீசார்

விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 750 போலீசார்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பை முன்னிட்டு 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் 65க்கும் மேற்பட்ட இடங்களிலும், பொதுமக்கள் மற்றும் பிற அமைப்புகள் சார்பில் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இச்சிலைகள் இன்று ஊர்வலமாக கொண்டு சென்று கரைக்கப்பட உள்ளன. முன்னதாக, அபிராமி தியேட்டர் அருகே இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டமும், தொடர்ந்து சி.டி.சி., டிப்போ அருகில் இருந்து ஊர்வலமாக மேட்டுப்பாளையம் சாலையில் சென்று பின் சிலைகள் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் கரைக்கப்பட உள்ளன. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, ரூரல் எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில், ஒரு ஏ.டி.எஸ்.பிம், நான்கு டி.எஸ்.பி.,க்கள், 6 மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், 25க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள், சிறப்பு இலக்கு படை, ஆயுதப்படை, பேரிடர் மீட்பு குழு, கமாண்டோ குழுவினர், வெடிகுண்டு கண்டறிதல் மட்டும் அச்சுறுத்தல் குழுவினர், போலீசார் என மேட்டுப்பாளையத்தில் சுமார் 750 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்' என்றனர்.-----


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி