மேலும் செய்திகள்
விளையாட்டு சாதனங்களுக்கு வேதா ஸ்போர்ட்ஸ் இருக்கு
19-Sep-2025
7 7 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட ஸ்ரீ கணேஷ் மில் ஸ்டோர்ஸ் நிறுவனம் பல வகைகளிலும் வளர்ந்து தரம், நம்பிக்கை மற்றும் புதுமையில் இன்றும் முன்னணி நிறுவனமாக உள்ளது. 1948-ஆம் ஆண்டு கோவையில் டாக்டர் நஞ்சப்பா சாலையில், ராமஷேசன் (ஜெய்ஹிந்த் துரை!! மற்றும் கணபதி (ஜெய்ஹிந்த் கணேசன்) ஆகியோர் துவங்கிய ஜெய் ஹிந்த் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனம், தரமான எலக்ட்ரிக் சாதனங்களை வழங்கி மக்களின் நம்பிக்கையை பெற்று வளர்ந்தது. 1973ம் ஆண்டு, அடுத்த தலைமுறை கே.ஜி.அனந்தநாராயணன் தலைமையில், ஸ்ரீ கணேஷ் மில் ஸ்டோர்ஸ் வேகமான வளர்ச்சியை நோக்கி பயணத்தை தொடங்கியது. 1984ம் ஆண்டு, அரிசி மற்றும் எண்ணெய் மில்களுக்கு தேவையான மில் இயந்திரங்களை குறைந்த செலவில் உயர் தரமாக தயாரித்து வழங்குவது நிறுவனத்தின் அடையாளமாக இருந்தது 1996ம் ஆண்டு முதல் புலே(Puley) மற்றும் ரித்துப் புல்லிகளை மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கியது 2003ம் ஆண்டு, பைலட் பிராண்டில் ரோஸ்டர்கள் மற்றும் பல்வரைசர்கள் விற்பனை செய்தனர். 2013ம் ஆண்டு மூன்றாம் தலைமுறை ஹரி கணேஷ் தலைமையில் நிறுவனம் மேலும் விரிவடைந்து வீடு, தொழிற்சாலை மற்றும் மில்களுக்கு தேவையான மில் இயந்திரங்களை சாரல் பிராண்டின் கீழ் அறிமுகப்படுத்தியது. ஹரி கணேஷ் வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து தனது தீவிர முயற்சியால், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி நவீன சாதனங்களை சந்தைக்கு கொண்டு வந்தார். அவரது தலைமையில் நிறுவனம் தரத்திற்கு முக்கயத்துவம் கொடுத்து அடுத்த கட்ட வளர்ச்சியை அடைந்தது. இந்நிறுவனம், 2018-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற ஹவேல்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டது. இன்று, ஸ்ரீ கணேஷ் மில் ஸ்டோர்ஸ், தமிழ்நாட்டில் உள்ள அரிசி மில்கள், கிரானைட் குவாரிகள், தொழிற்சாலைகள், வீட்டு உபயோகக் கருவிகள் ஆகியவற்றிற்கு உயர்தர எலக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் சாதனங்களை வழங்குகிறது. ஹவேல்ஸ் பேஸ் மற்றும் சிங்கிள் பேஸ் மோட்டார்கள்,இன்வெர்ட்டர் மோட்டார்கள், பிரேக் டியூட்டி மோட்டார்கள், மலேசியா சிங்கப்பூர், ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.வாடிக்கையாளர்களின் தேவைகளை கவனித்து தொழில்நுட்ப முன்னேற்றங்களைஅடையாளப்படுத்தும் நிறுவனமாக உள்ளது. ஸ்ரீ கணேஷ் மில் ஸ்டோர்ஸ், 130, குன்னன் கோனார் தெரு, காட்டூரிலும், எண்,20. காளிநாகராயன் தெரு, (கீதா கேண்டின் அருகில்) ராம் நகரில் உள்ளது. மேலும் விரபங்களை, 98949 66652 மற்றும் www.ganeshmatstores.comஇணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.
19-Sep-2025