உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சா, மெத்தாபீட்டமைன் விற்ற 8 பேருக்கு சிறை

கஞ்சா, மெத்தாபீட்டமைன் விற்ற 8 பேருக்கு சிறை

கோவை: குனியமுத்துார் போலீசார், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர்களிடம் விசாரித்தனர். சோதனையில் அவர்களிடம் கஞ்சா இருந்தது. அவர்கள் மதுரையை சேர்ந்த கமேஷ், 20, ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுகன்ராஜ், 29, தேனியை சேர்ந்த ஹர்சன், 22, சிவகங்கையை சேர்ந்த அகிலன், 19, தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திகேயன், 21 எனத் தெரிந்தது. இவர்கள், கோவை திருமலையாம்பாளையம் பகுதியில் தங்கி, கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர். 5 கிலோ கஞ்சா, 4 மொபைல்போன்கள், பைக் ஆகியவற்றை கைப்பற்றினர். * சரவணம்பட்டி போலீசார் காந்திமாநகர் பகுதியில் பாழடைந்த கட்டடம் அருகே, மெத்தாபீட்டமைன் விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி, ஹரிஷ்குமார், 30, காந்தி மாநகரை சேர்ந்த பாலமுரளி, 26, ஜோதிபுரத்தை சேர்ந்த பூபாலன், 25 ஆகிய மூவரை, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !