உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 80 சதவீதம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; பா.ஜ., கூட்டத்தில் தகவல்

80 சதவீதம் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு; பா.ஜ., கூட்டத்தில் தகவல்

அன்னுார்; 'நாட்டில் 80 சதவீதம் கிராமப்புற வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது,' என பா.ஜ., கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மூக்கனுாரில், ராணி மகாலில், மத்திய அரசின் 11 ஆண்டு கால ஆட்சி சாதனை விளக்கக் கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமை வகித்தார். ஒன்றிய பார்வையாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகநாதன் பேசுகையில், ''ஜல் ஜீவன் திட்டத்தின் படி கடந்த ஆறு ஆண்டுகளில் புதிதாக 12 கோடியே 40 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தரப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப் புறத்தில் 80 சதவீத வீடுகளில் குடிநீர் இணைப்பு உள்ளது. குறைந்த பிரிமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு, கட்டணம் இல்லாமல் மருத்துவ காப்பீடு ஆகியவை வழங்கப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு இலவச காஸ் இணைப்பு தரப்படுகிறது. 10 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு கழிப்பறை கட்டித் தரப்பட்டுள்ளது, என்றார்.கூட்டத்தில் மத்திய அரசின் 11 ஆண்டுகால சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வீடு வீடாக விநியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், மாநில பொது குழு உறுப்பினர் திருமூர்த்தி, ஒன்றிய பொதுச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ