திட்ட முகாமில் 84 மனுக்களுக்கு தீர்வு
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன், பேரூராட்சி தலைவர் அகத்துார்சாமி, துணை தலைவர் சையது அபுதாஹீர், தாசில்தார் வாசுதேவன், செயலர் அலுவலர் ஆனந்தகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், 745 மனுக்கள் பெறப்பட்டன. அதில், மகளிர் உரிமைத்தொகை கேட்டு 356 மனுக்கள் பெறப்பட்டன. உடனடியாக, 84 மனுக்கள் தீர்வு காணப்பட்டன.