மேலும் செய்திகள்
அங்கன்வாடிக்கு தீ வைப்பு: கேரள போலீஸ் விசாரணை
29-Oct-2024
வால்பாறை; தமிழக - கேரள எல்லையில் வால்பாறை அமைந்துள்ளது. கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் வழியில், மளுக்கப்பாறை மலைப்பகுதியில் ஐந்து ஆதிவாசிகள் செட்டில்மென்ட்கள் உள்ளன.அவர்களின், அத்யாவசிய தேவைகளுக்காக, கேரளாவில் உள்ள சாலக்குடிக்கும், தமிழக -- கேரள எல்லையில் உள்ள வால்பாறைக்கும், அதிகளவில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், செட்டில்மென்ட் பகுதி பழங்குடியின மக்கள் வசதிக்காக, கேரள மாநில பழங்குடியினர் மேம்பாட்டு துறை சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால், பழங்குடியின மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இது குறித்து, நேற்று 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்பட்டது. இந்நிலையில், பழுதடைந்த ஆம்புலன்ஸ் சரி செய்வதற்காக, மீட்பு வாகனத்தில் மண்ணுத்தியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில், 'மளுக்கப்பாறை பழங்குடியின மக்களின் நலன் கருதி பழுதடைந்த நிலையில் உள்ள ஆம்புலன்ஸ், இரண்டு நாளில் சரி செய்யப்படும். அதன்பின் பழங்குடியின மக்களின் பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும்,' என்றனர்.
29-Oct-2024