கலெக்டர் அலுவலகத்தில் குரங்கு பிடிக்க கூண்டு
கோவை: கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை சிவானந்தா காலனியில் கம்யூ., கட்சியினர் நடத்திய மாநாட்டில் பங்கேற்பதற்காக பழநி யிலிருந்து கட்சியினர் கோவை வந்திருந்தனர். அந்த பஸ் கலெக்டர் அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது பஸ்ஸின் மேலே அமர்ந்திருந்த குரங்கு தாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தில் தஞ்சமடைந்தது. அங்குள்ள உணவகங்களில் சாப்பிட வந்த மக்களிடம் உணவை பிடுங்கி சுவைத்தது, விற்பனைக்கு வைத்திருந்த வடை, பஜ்ஜி, போண்டாக்களை எடுத்து தின்றது. உணவுக்கடை நடத்துவோர் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதிக்கு தகவல் தெரிவித்தனர். சில மணி நேரங்களில் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனுள் பழ வகைகளை வைத்தனர். ஆனால் குரங்கு கூண்டில் இனியும் அகப்படவில்லை. வனத்துறையினர் தொடர்ந்து குரங்கை கண்காணித்து வருகின்றனர்.