உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புதர்சூழ்ந்த மயானம்; சிறுத்தை பதுங்குவதால் பீதி

புதர்சூழ்ந்த மயானம்; சிறுத்தை பதுங்குவதால் பீதி

வால்பாறை; வால்பாறையில், புதர் சூழ்ந்து காணப்படும் ஹிந்துக்கள் மயானத்தில், சிறுத்தை பதுங்குவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வால்பாறை நகரில், அரசு மருத்துவமனைக்கு பின்பக்கம், ஹிந்துக்கள் மயானம் உள்ளது. கடந்த, ஆறு மாதங்களுக்கு மேலாக மயானத்தை சுற்றிலும் புதர் மண்டிக்கிடக்கிறது. இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய வருவோர் அவதிப்படுகின்றனர்.புதர்சூழ்ந்த மயானத்தில் பகல் நேரத்திலேயே சிறுத்தை பதுங்குகிறது. இரவு நேரத்தில் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் சிறுத்தை புகுந்து விடுகிறது. இதனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், உள்நோயாளிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறையில் உள்ள ஹிந்துக்கள் மயானத்தில் இறந்தவர்களின் உடலை புதைக்க முடியாத அளவுக்கு புதர்சூழ்ந்து காணப்படுகிறது. பகல் நேரத்தில் புதரில் சிறுத்தை பதுங்குகிறது.பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட குளியல் அறை மற்றும் கழிப்பிடம், பல ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே உள்ளது. எனவே, நகராட்சி சார்பில் மயானத்தை சுற்றியுள்ள புதரை அகற்றி, குளியல் அறையை சீரமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி