உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புனித பொருளுக்கு கண்ணியமான விடை 

புனித பொருளுக்கு கண்ணியமான விடை 

கோவை: வீடுகளில் பழைய சுவாமி படங்கள், சிலைகள் இருப்பதை பயன்படுத்த முடியவில்லை என்றால் அவற்றை ஆர்.எஸ்.புரம் கிழக்கு வெங்கடசாமி சாலையிலுள்ள சேவாஸ்ரம் டிரஸ்ட்டில் ஒப்படைக்கலாம். இதற்கான பணி, உத்வாசன சேவை என்றழைக்கப்படுகிறது. இப்பணியை ஸ்ரீ காமாட்சி ஆர்ஷ சம்ஸ்கிருதி அறக்கட்டளை நாளை (செப்.6) நடத்துகிறது.  நம் வீட்டிலுள்ள சுவாமியை வழிபாடு செய்ய உருவாக்கிய புனிதபொருட்களுக்கு கண்ணியமான முறையில் விடை கொடுப்போம்.  மரச்சட்டங்களால் பொருத்தப்பட்ட சுவாமி படங்கள், உலோக பூஜை பொருட்கள், ஸ்லோக புத்தகங்கள், சிலைகள், பஞ்சாங்கங்களை உறுதியான துணி அல்லது சணல் பை, அட்டை பெட்டியில் வைத்து சமர்ப்பிக்கலாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை