மேலும் செய்திகள்
தொட்டியில் விழுந்த தொழிலாளி பலி
21-Oct-2025
கிணத்துக்கடவு: பொள்ளாச்சி --- கோவை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, கிணத்துக்கடவு அருகே உள்ள ஏழூர் செல்லும் ரோட்டில் அதிக அளவில் குடியிருப்புகள் உள்ளன. இங்கு, நேற்று காலை, ரோட்டோரம் இருக்கும் மின்கம்பத்தில் இருந்த கம்பி அறுந்து விழுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், அந்த வழியில் மக்கள் சென்றால் மின்சாரம் தாக்கி விபத்து ஏற்படும் என்பதால், யாரும் அவ்வழியில் செல்ல முடியாதவாறு காரை நிறுத்தினர். அதன்பின், உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய அலுவலர்கள் நேரில் வந்து சரி செய்யும் போது, எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டதால், கம்பத்தில் தீ பொறி வெடித்தது. அதைப் பார்த்து மக்கள் அச்சமடைந்தனர். மின்வாரியத்தினர் சாதுரியமாக கையாண்டு மின் கம்பியை சீரமைத்தனர்.
21-Oct-2025