உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியிருப்பில் புகுந்த சிறுத்தை

குடியிருப்பில் புகுந்த சிறுத்தை

வால்பாறை: வால்பாறை நகைக்கடை வீதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதியில், நேற்று முன் தினம் இரவு, 2:00 மணிக்கு சிறுத்தை புகுந்துள்ளது. இது அந்த பகுதியில் உள்ள கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் நெருக்கம் மிகுந்த வால்பாறை நகரில் சிறுத்தை விசிட் செய்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணியர் அச்சமடைந்துள்ளனர்.வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் சிறுத்தைக்கு பிடித்தமான நாய்,கோழி வளர்ப்பதாலும், மார்க்கெட் பகுதியில் திறந்த வெளியில் மாமிசக்கழிவுகள் வீசப்படுவதாலும் தான் சிறுத்தை அந்தப்பகுதியில் உலா வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்ப்பு பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி