மேலும் செய்திகள்
'ஓவர் பிரின்ட்' தபால் தலை பின்னணியில் ஆச்சரியம்
27-Oct-2024
வாசனை மற்றும் மருத்துவ குணங்களுக்காக பழங்காலத்திலிருந்தே, சந்தனம் மதிக்கப்படுகிறது. சந்தன மரம், தற்போது இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, சீனா, தைவான், ஹவாய் மற்றும் சில தென் பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இந்த மரம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், முக்கியமாக, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் வளர்கிறது. சந்தனம், பூச்சிகளை எதிர்க்கும் தன்மை கொண்டது. மரம் வளரும் போது, மரத்தின் மையப்பகுதியான அதன் வேர்கள் மற்றும் மரத்தின் கடினமாக மையப்பகுதியில் சந்தன எண்ணெய் உருவாகிறது. எண்ணெய் தவிர, சந்தன மரம் அதன் பட்டைக்காகவும் மதிப்பிடப்படுகிறது. துாள் பட்டை 'அகர்பத்தி அல்லது துாபக் குச்சிகள்' தயாரிப்பில் ஒரு முக்கிய மூலப்பொருளாகும். சந்தன மரம் செதுக்குவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. திறமையான கைவினைக் கலைஞர்கள், மரத்தை, கலசங்கள், சிலைகள் மற்றும் கோவில் கதவுகளில் வடிவமைக்கின்றனர். சந்தனத்தின் நறுமணம், சிகிச்சையிலும், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை போக்கவும், கோபத்தை தணிக்கவும், அமைதியை வளர்க்கவும் பயன்படுகிறது. சந்தன வாசனையுடன் அஞ்சல் தலையை, இந்திய அஞ்சல் துறை 2006ம் ஆண்டு வெளியிட்டது. இதுவே, இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட முதல் நறுமண அஞ்சல் தலை.(நவ., 12, 13ல் சுகுணா திருமண மண்டபத்தில், அஞ்சல் தலை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்).
27-Oct-2024