உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனைமலை காப்பகத்தில் இரவில் ஒளிரும் காளான்

ஆனைமலை காப்பகத்தில் இரவில் ஒளிரும் காளான்

வால்பாறை:ஆனைமலை புலிகள் காப்பகம், மானாம்பள்ளி வனச்சரகத்தில், இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் 'பயோலுமினசென்ட்' காளான்கள் கண்டறியப்பட்டன.கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில், வால்பாறை அருகே மானாம்பள்ளி வனச்சரகம், உருளிக்கல் வனப்பகுதியில் பயோலுமினசென்ட் என்ற இரவில் ஒளிரும் காளான்கள் நிறைந்து காணப்படுகின்றன.மிதமான தட்பவெப்பத்தில் வளரும் இந்த வகை காளான்கள், இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. இதை, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியா சாஹு, தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் கூறியதாவது:மானாம்பள்ளி வனச்சரகத்தில் அரிய வகை தாவரங்கள் நிறைந்துள்ளன. காளான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்தியாவில், 125 வகையான காளான்கள் உள்ளன. இதில், உருளிக்கல் - மானாம்பள்ளி வனத்தில், 'பயோலுமினசென்ட்' வகை காளான்கள் இருப்பது தற்போதுதான் கண்டறியப்பட்டுள்ளது.இந்த வகை காளான்களை இந்தியாவில் மட்டுமின்றி ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் காண முடியும். இந்த காளான்கள் உயிருள்ளவரை இரவு நேரத்தில் ஒளிரும் தன்மை கொண்டவை. விஷத்தன்மை அற்றவை.இவ்வாறு அவர் கூறினார்.'பயோலுமினசென்ட்' வகை காளான் குறித்து, வனத்துறை கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாஹூ சமூகவலைதள பதிவு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை