வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நல்ல முயற்சி பாராட்டுக்கள்
சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கிட்டாம் பாளையம் ஊராட்சி. இங்கு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.கிட்டாம்பாளையம், குளத்துப்பாளையம், வடுகபாளையம், வினோபா நகர் ஆகிய ஊர்கள் உள்ளன. தினமும், 600 கிலோ குப்பை சேகரமாகிறது. அதில், 200 கிலோ குப்பை பிளாஸ்டிக்காக உள்ளது. மக்காத குப்பையை மறுசுழற்சி செய்து பயன்படுத்த, ஊராட்சி நிர்வாகமும், 'ரீ கம்போஸ்- ரீ சைக்கிளிங்' எனும் தனியார் நிறுவனமும் தீர்மானித்தன.அதன்படி, 2 டன் பிளாஸ்டிக் குப்பை சேகரிப்பட்டு, அதை மறுசுழற்சி செய்து, கிட்டாம் பாளையம் நால்ரோட்டில், இருக்கையுடன் கூடிய நிழற்குடை அமைத்துள்ளனர்.ஊராட்சி தலைவர் சந்திரசேகர் கூறுகையில், ''மக்களிடம் மக்கும் மற்றும் மக்காத குப்பை தரம் பிரித்து வாங்குவதில் உறுதியாக உள்ளோம். அதனால், மக்காத நெகிழிகளை கொண்டு நிழற்குடையும், மக்கும் குப்பையை உரமாக்கியும் வருகிறோம்,'' என்றார்.தனியார் நிறுவன இயக்குனர் பிரசாந்த் கூறுகையில், ''மக்காத பல வகையான பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்து, சிமென்ட் ஷீட் போன்ற ஷீட்களும், பக்கவாட்டு சுவர்களுக்காக கனமான ஷீட்களும், தரையில் பதிக்க, பேவர் பிளாக் போன்ற கற்களும், இருக்கைகளுக்காக சீட்களும் தயாரித்தோம். அதை கொண்டு, நிழற்குடை அமைத்து வருகிறோம். விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும். மக்கள் ஒத்துழைப்பால், இந்த முயற்சி சாத்தியமானது,'' என்றார்.
நல்ல முயற்சி பாராட்டுக்கள்