மேலும் செய்திகள்
மழைக்கு 'பஞ்சர்' ஆன ரோடுகள்
27-Jun-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, கூட்டு குடிநீர் திட்ட குழாய் சேதமடைந்து குடிநீர் வெளியேறியதால் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டின் வழியாக, குறிச்சி - குனியமுத்தூர் பகுதிகளுக்கு செல்லும் கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் குழாய் உள்ளது. இதில், கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் அருகே, ரோட்டின் ஓரத்தில் உள்ள நடைபாதையில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் திடீரென குழாய் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வெளியேறியது.மூன்று மணி நேரத்திற்கும் மேலாக, சர்வீஸ் ரோட்டில் குடிநீர் வழிந்தோடியதால், அவ்வழியே சென்ற வாகனங்கள் ரோட்டை கடக்க சிரமப்பட்டன.கடந்த ஒரு வாரத்துக்கு முன், பேரூராட்சி வணிக வளாகம் அருகே குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் ஆறாக ரோட்டில் வழிந்தோடியது. இதை சரி செய்ததும் மீண்டும் வேறு இடத்தில் குடிநீர் வெளியேறுகிறது.இந்த சர்வீஸ் ரோட்டில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஐந்து முறைக்கும் அதிகமாக வெவ்வேறு இடங்களில் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ரோட்டில் வழிந்தோடும் குடிநீர் கால்வாயில் நிரம்பி கழிவு நீருடன் கலந்து ரோட்டில் தேங்கிய நிலையில் உள்ளது.இதனால், ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை தொடர்ந்து நேற்று காலை குழாய் சீரமைப்பு பணிகள் நடந்தது.குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகள், குழாய் உடைப்பை தற்காலிகமாக தீர்வு காண்பதை தவிர்த்து, நிரந்தரமாக சரி செய்ய தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
27-Jun-2025