உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீர் வெளியேறிய பிரச்னைக்கு தீர்வு

கழிவுநீர் வெளியேறிய பிரச்னைக்கு தீர்வு

அன்னுார் ; காரேகவுண்டம்பாளையம் ஊராட்சி, மேல் கதவுகரையில், 5.75 ஏக்கர் பரப்பில், தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலை ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. இருவாரங்களுக்கு முன்பு, தொடர் மழை பெய்த சமயத்தில் தொழிற்சாலையிலிருந்து ஏராளமான சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் வெளியேறியது.அருகில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் குட்டையிலும் கழிவுநீர் தேங்கியது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது. இது குறித்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, ஊராட்சி தலைவர் தங்கராஜ், துணைத்தலைவர் குருந்தாசல மூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபால் ஆகியோர் தொழிற்சாலைக்கு சென்று நிர்வாகத்திடம் தெரிவித்தனர். இதையடுத்து நிர்வாகம் தொழிற்சாலையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட வழியை முழுமையாக சிமென்ட் கான்கிரீட் மூலம் அடைத்தது.தொழிற்சாலையில் இருந்து கழிவுநீர் வெளியேற்றப்படாது என ஊராட்சி நிர்வாகத்திடம் உறுதி அளித்தது. இதையடுத்து கழிவு நீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ