உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகைக்கடைக்குள் புகுந்த புள்ளிமான்

நகைக்கடைக்குள் புகுந்த புள்ளிமான்

சோமனுார்,:கோவை மாவட்டம், சோமனுாரில் நகை கடைக்குள் புகுந்த புள்ளிமானால், ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சோமனுாரில் உள்ள நகைக்கடையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், ஊழியர்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். சில வாடிக்கையாளர்கள் நகைகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென புள்ளிமான் ஒன்று கடைக்குள் நுழைந்தது. ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கடைக்குள் அங்கும், இங்கும் சுற்றியது மான். சுதாரித்துக்கொண்ட கடை ஊழியர்கள், கதவை திறந்தனர். ஒரு சில நிமிடங்களில், மான் துள்ளிக்குதித்து வெளியே ஓடியது.சோமனுார், செம்மாண்டாம்பாளையம், புதுப்பாளையம் பகுதியில் கவுசிகா நதி, நொய்யல் ஆற்றங்கரை பகுதியில், ஏராளமான மான்கள் வசிக்கின்றன. இவை, வழி தவறி நகர பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து விடுவதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை