நடுரோட்டில் குத்தாட்டம்; சுற்றுலா பயணியர் அத்துமீறல்
வால்பாறை : கோடை விடுமுறையில் வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர், நடுரோட்டில் அத்துமீறி 'டான்ஸ்' ஆடினர்.கோடை விடுமுறையில் வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணியர், ஆழியாறு வழியாக வால்பாறைக்கு வரும் மலைப்பாதையில், வரையாடு, சிங்கவால் குரங்குகள், யானைகள், காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர்.சக்தி - தலனார் ரோட்டில் உள்ள வியூ பாயிண்ட், நல்லமுடி காட்சி முனை, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட இடங்களில், சுற்றுலா பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்படுக்கிறது.கனமழையால் நீர்வீழ்ச்சி பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இந்நிலையில், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு பகுதியில் சுற்றுலா பயணியர் வேனை நிறுத்தி, நடுரோட்டில் சினிமா பாடலுக்கு 'டான்ஸ்' ஆடினர்.ஆனால், வனத்துறை எச்சரிக்கையை மீறி, ரோட்டில் வாகனத்தை நிறுத்தி, அதிக சப்தமாக பாடல்களை ஒலிக்க செய்து, குத்தாட்டம் போட்டனர்.