மேலும் செய்திகள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
15-Oct-2025
அன்னுார்: அன்னுாரில் பெண் ஒருவர் பயணியர் ஆட்டோ ஓட்டி அசத்துகிறார். அன்னுார் நகரில் 100க்கும் மேற்பட்ட பயணியர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. கடும் போட்டிகளுக்கு நடுவே பெண் ஒருவரும் அன்னுாரில் ஆட்டோ ஓட்டி அசத்துகிறார். இதுகுறித்து ஆட்டோ டிரைவர் மணிமேகலை, 34. கூறியதாவது: எனது சொந்த ஊர் காக்காபாளையம். எனது கணவர் சந்தோஷ் கட்டட தொழிலாளி. எங்களது இரு குழந்தைகளும் மூன்று ஆண்டுகளுக்கு முன் சிறு குட்டையில் தேங்கி இருந்த நீரில் குளிக்கும் போது இறந்துவிட்டனர். இதில் மனமுடைந்து போயிருந்த என்னை சுயதொழில் செய்யும்போது மன ஆறுதலும் கிடைக்கும் வருமானமும் பெறலாம் என என் கணவர் ஊக்குவித்தார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுவதற்கு பயிற்சி பெற்றேன். சி.என்.ஜி., மூலம் இயங்கும் ஆட்டோ தனியார் நிதி நிறுவன உதவியோடு 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கினேன். கடந்த ஒரு மாதமாக இயக்கி வருகிறேன். அன்னுாரில் குறைந்த வாடகையே கிடைக்கிறது. போதுமான வாடகை கிடைக்காததால் மாத தவணைத் தொகை செலுத்துவதில் சிரமம் உள்ளது. கோவில்பாளையம், மேட்டுப்பாளையம் என, சி.என்.ஜி., நிரப்புவதற்கு அதிக தொலைவு செல்ல வேண்டி உள்ளது. அரசு அன்னுார் பகுதியில் சி.என்.ஜி., நிலையம் அமைக்க வேண்டும். பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் தர வேண்டும். வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
15-Oct-2025